செய்திகள்

மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜண்ட் சரவணன்

மக்களும் கடவுளும் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். 

DIN

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட்  படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியிருந்தனர்.  இந்தப் படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்நிலையில், கோவை பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழாவில் லெஜண்ட் சரவணன் பங்கேற்றார். இங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது: 

சென்னையை போலவே கோவையும் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. எனது அடுத்தப் படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  மக்களும், மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். இப்போதைய ஆட்சி சிறப்பாகவே நடைபெறுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT