செய்திகள்

அமீர்கானை தொடர்ந்து சிக்கலில் ஷாருக்கான்.. வெல்லுமா பதான்?

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் டிவிட்டரில் டிரண்ட் செய்து வருகிறார்கள்.

DIN

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் டிவிட்டரில் டிரண்ட் செய்து வருகிறார்கள்.

ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். இந்த படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது.

தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கிறது. யாஷ் ராஜ் தயாரிப்பின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் டிவிட்டரில் பதான் படத்தை புறக்கணிக்கும் ஹாஷ்டேக்கள் டிரண்ட் செய்யப்பட்டு வருகிறது.

பாய்காட் பதான்(boycott pathan) என ரசிகர்கள் புறக்கணிப்பை துவங்கியுள்ளனர். இதற்கு முன் அமீர்கான் நடிப்பில் வெளியான ‘லால் சிங் சத்தா’ திரைப்படமும் இதேபோல் புறக்கணிப்பை சந்தித்ததால் வசூல் ரீதியில் தோல்விப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT