செய்திகள்

மாஸ்டர் பட நடிகருக்கு அஜித் அளித்த பரிசு!

நடிகர் அஜித் அளித்த பரிசு குறித்து பிரபல இளம் நடிகரான சிபி புவன சந்திரன் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

DIN

நடிகர் அஜித் அளித்த பரிசு குறித்து பிரபல இளம் நடிகரான சிபி புவன சந்திரன் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இப்படத்தில் இடம்பெற்றுள்ள அஜித் அறிமுக பாடலான ‘சில்லா..சில்லா’ பாடல், ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில், நடிகர் அஜித் கொடுத்த ‘கூலிங்கிளாஸ்’ போட்டோவை போட்டு துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிபி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், காசேதான் கடவுளடா பாடல் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் கொடுத்த இந்த விலை மதிப்பற்ற பரிசை, பொக்கிஷமாக வைத்திருப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மாஸ்டர் படத்தில் மாணவராக நடிகர் விஜய்யுடன் நடித்து பிரபலமான சிபி, பிக் பாஸிலும் பங்குபெற்று பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT