செய்திகள்

வாரிசு படத்தின் ‘அம்மா’ பாடல்: முன்னோட்டம் வெளியீடு

வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், அந்த பாடலின் முன்னோட்ட விடியோ தற்போது வெளியாகியுள்ளது.

DIN

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 99 மில்லியன் (9.9 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 25 மில்லியன் (2.5 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து, 3வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்தப் பாடல் அம்மாவுக்காக என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவேக் எழுதிய இந்தப்பாடலை பிரபல பாடகி சித்ரா பாடி உள்ளார். 

இந்நிலையில், அம்மா பாடலின் முன்னோட்ட விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மா சென்டிமென்ட் பாடலில் விஜய் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பினால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT