செய்திகள்

சினிமாவை ஓடிடி அழித்துவிடும்: அடூர் கோபாலகிருஷ்ணன்

கேரளத்தின் புகழ்பெற்ற இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் ஓடிடி சினிமாவை அழித்துவிடும் என எச்சரித்துள்ளார்.

DIN

கேரளத்தின் புகழ்பெற்ற இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன்  சினிமாவை ஓடிடி அழித்துவிடும் என எச்சரித்துள்ளார்.

'சுவயம்வரம்’, 'எலி பத்தாயம்’, ‘நாலு பெண்ணுகள்’ உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி 16 தேசிய விருதுகள், 18 கேரள மாநில விருதுகள், 2004-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே போன்ற பல விருதுகளைப் பெற்று இந்திய சினிமாவில் மதிக்கப்படும் ஆளுமையாக இருப்பவர் அடூர் கோபாலகிருஷ்ணன்(80).

இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “திரையரங்குகளில் பார்க்கப்படும் சினிமா என்பது ஒரு சமூக அனுபவம். அதைச் சிறிய திரையில் எப்படி பார்க்க முடியும்? கரோனாவால் வீடுகளில் முடங்கியதால் ஓடிடிக்கு தள்ளப்பட்டோம். ஆனால், சினிமா பிழைத்திருக்க வேண்டுமென்றால் அவை சின்னத்திரையை நம்பியிருக்கக் கூடாது. குறிப்பாக, ஓடிடிக்காக தயாரிக்கப்படும் படங்கள் சினிமாவை அழித்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT