தலைமைச் செயலர் வெ.இறையன்பு 
செய்திகள்

பாடலாசிரியரான இறையன்பு..!

தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு புதுமுகங்கள் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

DIN

தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு புதுமுகங்கள் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்திய ஆட்சிப் பணியில் பாராட்டுக்களைப் பெற்ற ஆட்சியரான வெ.இறையன்பு தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

ஆட்சிப் பணியைத் தாண்டி சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை ஆகிய பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். குறிப்பாக, இவரின் ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘போர் தொழில் பழகு’ போன்றவை முக்கியமான நூல்களாக கருதப்படுகின்றன.

இந்நிலையில், ஓம் ஜெயம் தியேட்டர் தயாரிப்பில் ரிஷி, சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் ‘பியூட்டி’ என்கிற திரைப்படத்திற்கு இறையன்பு 2 பாடல்களை எழுதியுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT