ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் வெளியீடுகளில் இனி உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினரிலிருந்து அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அரசியலில் முழு கவனத்தை செலுத்த இருப்பதால் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் இயக்குநர் மாரி செல்வராஜின் ’மாமன்னன்’ படமே கடைசி படம் என்றார்.
இதையும் படிக்க: 13 கதாபாத்திரங்களில் சூர்யா?
அதேநேரம், அமைச்சராக பதவியேற்றதால் இனி ’ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் வெளியிடும் படங்களில் ‘உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் வழங்கும்’ என்பதற்கு பதிலாக அவரின் மனைவியும் இந்நிறுவனத்தின் துணை இயக்குநருமான ‘கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் வழங்கும்’ என்கிற புதிய பெயர் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் அதிக படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால், கட்சிக்கு களங்கம் ஏற்படலாம் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விரைவில் இந்தப் பெயர் மாற்றம் நிகழும் எனவும் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.