செய்திகள்

'மாஸ்டர் மாதிரி இருக்காது...' அஜித் படம் குறித்து விக்னேஷ் சிவன்!

ஏகே 62 படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

ஏகே 62 படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கருத்து தெரிவித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. ​இப்படம் 2023 பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து,  லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ’ஏகே 62’ படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தைக் குறிப்பிட்டு விஜய்யின் மார்க்கெட் நிலவரத்திற்காகவும் இயக்குநரின் படமாகவும் 50:50 என்கிற ரீதியில் அப்படம் உருவானது. அதேபோல் ஏகே 62-ல் அஜித்திற்காக உங்களின் பாணியை மாற்றிக்கொள்வீர்களா என விக்னேஷ் சிவனிடம் கேள்வியெழுப்பபட்டது.

அதற்கு அவர் ‘லோகேஷ் கனகராஜ் ஒரு ஆக்சன் இயக்குநர் என்பதால் ஒரு நட்சத்திர நடிகருடன் இணைவது எளிதானது. என் படங்களில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்காது. அதனால், எனக்கான திரைப்படமாகவும் நினைத்ததை செய்யக்கூடிய சுதந்திரமும் ‘ஏகே 62’ படத்தில் இருக்கும். இது என் படமாகவே உருவாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் வியாபாரக் கும்பலின் குரூரமும் காவல்துறையின் கருணையும்! - தில்லி கிரைம் - 3!

மேட்டூர் அணை நிலவரம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

விலைவாசி உயா்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தாா் டிரம்ப்!

சொல்லப் போனால்... நீதி என்பது யாதெனில்…

SCROLL FOR NEXT