செய்திகள்

’விஜய் 67' படப்பிடிப்பு எப்போது? அறிவிப்பு

விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பின் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார். ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் உருவாகவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

முன்னதாக, விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு வில்லனாக முதலில் நடிகர் பிருத்விராஜ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் தேதி பிரச்னையில் விலகியதால் நடிகர் விஷால் இணைந்துள்ளதாக பேசப்பட்டது.

அதன்பின், விஷாலுக்குப் பதிலாக நடிகர் அர்ஜூன் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சம்பளமாக ரூ.4 கோடி பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

மேலும், இப்படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 2023, ஜனவரி மாதம் துவங்க உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

இந்தியா - இஸ்ரேல் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

இந்த வார ஓடிடி படங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.92 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT