முகப்பு
செய்திகள்

துணிவு படத்தின் டிரைலர் எப்போது?: படக்குழு அறிவிப்பு

துணிவு படத்தின் டிரைலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:

துணிவு படத்தின் டிரைலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. 

துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது. துணிவு படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதலே படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு வந்தனர். முதல் அறிவிப்பாக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரத்தின் கதாபாத்திரம் வெளியானது. 

படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மைப்பா. இதேபோல் சமுத்திரக்கனி தயாளன் கதாபாத்திரத்திலும், நாயகி மஞ்சு வாரியர் கண்மணி கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். அதேசமயம் படத்தின் நாயகன் அஜித்தின் கதாபாத்திரம் இறுதியாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அஜித்தின் கதாபாத்திரத்தை அறிய மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

படக்குழு, அஜித் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிடாமல், கேள்விக்குறியுடன் போஸ்டரை மட்டுமே வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வு அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் டிரைலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.