இசைஞானி இளையராஜாவின் 1422 ஆவது படத்தின் அறிவிப்பு வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இளையராஜாவின் 1422 ஆவது படம் 14-02-2022 நாளில் வெளியாகிறது. இரண்டு எண்களும் ஒரே மாதிரி இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் குறித்த விவரங்கள் காதலர் தினம் அன்று தெரியவரும். இளையராஜா இசையில் தற்போது வெற்றிமாறனின் விடுதலை, மாமனிதன், கிளாப், சுசி கணேசனின் வஞ்சம் தீர்த்தாயடா, மாயோன், தமிழரசன், துப்பறிவாளன் 2, தேசிய தலைவவர் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன.
இதையும் படிக்க | சூர்யா படத்தைக் கைப்பற்றிய உதயநிதி
1976 ஆண்டு துவங்கி கிட்டத்தட்ட 50 வருடங்களாக தனது இசையின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இளையராஜா. பல தலைமுறையினரும் அவரது இசைக்கு ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.