செய்திகள்

'புஷ்பா' படத்தைப் பார்த்து செம்மரம் கடத்திய நபர்: காவல்துறையினரிடம் வசமாக சிக்கியது எப்படி?

DIN

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. 

இந்தப் படம் 90களின் பிற்பகுதியில் தமிழக ஆந்திர எல்லையில் நடைபெற்ற செம்மரக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் காவல்துறையிடம் சிக்காமல் இருக்க பால் வண்டியில் செம்மரம் கடத்துவார். 

இந்த நிலையில் அந்தப் படத்தை பார்த்து அல்லு அர்ஜுனை முன்மாதிரியாகக் கொண்டு பெங்களூரைச் சேர்ந்த யாஷின் என்ற நபர் ஆந்திர - கர்நாடக எல்லையில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்துக்கு தனது லாரியில் செம்மரம் கடத்தி சென்றுள்ளார்.

மகாராஷ்டிர எல்லையில் காவல்துறையினர் அவரது லாரியை பரிசோதித்தில் 2.45 கோடி மதிப்புடைய செம்மரங்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. செம்மரங்கள் மீது காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்து மறைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. 

தனது லாரியில் கரோனா அவசர பணி என்று எழுதியிருந்திருக்கிறார். அவரிடம் தற்போது மகாராஷ்டிர காவல்துறையினர் விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT