செய்திகள்

விக்ரம் - துருவ் இணைந்து மிரட்டும் மகான் - டிரெய்லர் இதோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

DIN

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விக்ரம் - துருவ் அப்பா மகனாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ஏற்கனவே இந்தப் பட  டீசர் வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அப்பா - மகனுக்கு இடையே நடைபெறும் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதையாக இருக்கும் என்பதை டிரெய்லரை அடிப்படையாகக் கொண்டு புரிந்துகொள்ள முடிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT