செய்திகள்

'பூவே உனக்காக' தொடரிலிருந்து திடீரென விலகிய நாயகி: இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு

பூவே உனக்காக தொடரிலிருந்து விலகுவதாக நடிகை ராதிகா ப்ரீத்தி தெரிவித்துள்ளார். 

DIN

சன் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக தொடர்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஒளிபரப்பானது முதல் இந்தத் தொடரில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

இந்தத் தொடரில் கீர்த்தி என்ற வேடத்தில் நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா திடீரென தொடரில் இருந்து விலகினார். தொடரில் அவர் இறந்ததாக காட்டப்பட்டார். இந்தத் தொடரை துவக்கத்தில் இருந்து இயக்கிய இயக்குநர் ராஜீவ் கே பிரசாத் மாற்றப்பட்டார். 

மேலும் ஆமணி, ஸ்ரீனிஷ் அரவிந்த், விக்னேஷ் என தொடரில் இருந்து விலகியவர்கள் எண்ணிக்கை மிக நீளம். இது ரசிகர்களிடையே ஏமாற்றமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தத் தொடரில் பூவரசி என்ற வேடத்தில் நடித்துவந்த ராதிகா ப்ரீத்தி இந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் பூவே உனக்காக தொடரிலிருந்து விலகுகிறேன் என்பதை கனத்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக சிறந்த வாய்ப்பை வழங்கிய சன் டிவிக்கு நான் நன்றி கடன்பட்டவளாக இருப்பேன். அன்பும் ஆதரவும் கொடுத்த எனது ரசிகர்களுக்கு நன்றி. என் எல்லா வாய்ப்புகளின் போதும் எனக்கு ஆதரவாக நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT