செய்திகள்

தளபதியின் ஹாட்ரிக் இயக்குநர்கள்: செல்ஃபியை படம்பிடித்த விஜய்

இயக்குநர்கள் அட்லி மற்றும் நெல்சன் திலீப் குமாருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் காட்சியை நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துள்ளார்.

DIN


இயக்குநர்கள் அட்லி மற்றும் நெல்சன் திலீப் குமாருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் காட்சியை நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துள்ளார்.

மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தின் விஜய் காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டன. இதன் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனைக் கொண்டு விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், விஜய்யை கடைசியாக இயக்கிய மூன்று இளம் இயக்குநர்களின் புகைப்படம் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லி, மாஸ்டர் இயக்கிய லோகேஷ் மற்றும் பீஸ்டை இயக்கி வரும் நெல்சன் ஆகியோர் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் சிறப்பம்பசமே அதை எடுத்தது நடிகர் விஜய்.

இயக்குநர் லோகேஷ் இந்தப் புகைப்படத்தையும் அதை எடுத்தது நடிகர் விஜய் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் மூன்று இயக்குநர்கள் என்ற ஒரு காரணமே டிரெண்ட் ஆவதற்குப் போதுமானது. ஆனால், இந்தப் படத்தை விஜய்யே எடுத்திருப்பதால் மேலும் அதிகளவில் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT