செய்திகள்

விஜய்யைத் தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா நெல்சன்?

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

DIN


ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

டாக்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இதன் முதல் பாடல் குறித்த அப்டேட்டும் இன்று (திங்கள்கிழமை) மாலை வெளியானது.

இதனிடையே, அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளிவந்தன. ரஜினியின் 169-வது பட இயக்குநர்கள் பட்டியலில் சிறுத்தை சிவா, கே.எஸ். ரவிகுமார், பாண்டிராஜ் ஆகியோர் மத்தியில் நெல்சன் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், ரஜினியின் 169-வது படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, தலைவர்169 எனும் ஹேஷ்டேக்கும் டிரெண்டாக தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT