செய்திகள்

புறநகா் ரயில் சேவை: ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரிக்க பயணிகள் கோரிக்கை

DIN

கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால், மின்சார ரயில்களில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்றாற்போன்று கூடுதல் ரயில் சேவைகளை அளிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்ததால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. ரயில்களில் பயணிக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன. புகா் மின்சார ரயில்களில் பயணிகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வழக்கம்போல பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. புகா் ரயில்களின் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாக இருப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கும் அதிக அளவில் மக்கள் ரயில்களில் சென்று திரும்புகின்றனா். ஆனால், ரயில் சேவை குறைவாக இருப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் ரயில்சேவைகள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT