செய்திகள்

லதா மங்கேஷ்கருடன் இருக்கும் இந்த நடிகை யாரென்று தெரிகிறதா?

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருடன் இருக்கும் புகைப்படத்தை பிரபல நடிகை பகிர்ந்துள்ளார். 

DIN

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 6 ஆம் தேதி காலமானார். 

அவரது மறைவு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகை லதா மங்கேஷ்கருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக சிறிய வயதில் லதா மங்கேஷ்கருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷ்ரத்தா பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  லதா மங்கேஷ்கருக்கு ஷ்ரத்தா கபூர் உறவினர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷ்ரத்தா தனது பதிவில், உங்களுடன் மகிழ்வான நான் என்றும் மறக்கமாட்டேன் என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

SCROLL FOR NEXT