செய்திகள்

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவில் மீண்டும் ஒரு பெரிய மாற்றம்: ரசிகர்கள் அதிருப்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியாக கண்மணி மனோகரன் நடித்து வந்தார்

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியாக கண்மணி மனோகரன் நடித்து வந்தார். அவரது வேடத்துக்கு நல்ல வரவேற்பும் இருந்து வந்தது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் தொடருக்காகவே அவரை 5 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில் கண்மணி மனோகரன் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் குயின் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதன் காரணமாக பாரதி கண்ணம்மாவிலிருந்து விலகினாரா அல்லது தொடரிலிருந்து நீக்கப்பட்டாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது அஞ்சலி கதாப்பாத்திரத்தில் அருள் ஜோதி என்பவர் நடிக்கிறார். முன்னதாக கண்ணம்மாவாக ரோஷ்னிக்கு பதிலாக வினுஷா தேவி மாற்றப்பட்டார். இந்த நிலையில் அஞ்சலியாக நடித்த கண்மணி மனோகரனும் மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

SCROLL FOR NEXT