செய்திகள்

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகை காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிச்சுலு என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார். இதனை அவரது கணவர் கௌதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். 

இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது. அப்போது கணவர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர். தற்போது அவரது வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

காஜல் அகர்வால் தற்போது துல்கர் சல்மான், அதிதி ராவுடன் இணைந்து ஹே சினாமிகா படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற மார்ச் 3 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT