செய்திகள்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை': வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

DIN

இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் சிம்புவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது. 

மாநாடு படம் வெளியாவதற்கு முன்பே அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, மன்மத லீலை என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கி முடித்துவிட்டார். இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் ரபிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

இந்தப் படம் தற்போதைய தலைமுறை காதலை பேசுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, கங்கை அமரன் பாடல்களை எழுதியுள்ளார். 

மணிவண்ணன் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எழுதியிருந்தார். தமிழ் ஏ அழகன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன், கோமாளி பட நாயகி சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். பிரேம்ஜி வழக்கம்போல நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. மாநாடு படத்துக்கு பிறகு வெளியாகும் இயக்குநர் வெங்கட் பிரபு படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT