இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் ஏ மாயா சேசாவே என்ற பெயரில் உருவானது. தெலுங்கில் நாக சைதன்யா - சமந்தா நடித்திருந்தனர். இந்தப் படம்தான் சமந்தா நடிப்பில் வெளியான முதல் படம்.
தமிழ் பதிப்பில் சிம்புவின் திரிஷாவும் ஒன்று சேர மாட்டார்கள். ஆனால் தெலுங்கில் இருவரும் இணைவது போல கிளைமேக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். உண்மையில் இந்தப் படத்தில் காதலர்களாக நடித்த நாக சைதன்யாவும் சமந்தாவும் நிஜத்திலும் காதிலித்து திருமணம் செய்துகொண்டு பிரிந்து விட்டனர்.
விண்ணைத்தாண்டி வருவாயா/ஏ மாயா சேசாவே வெளியாகி இன்றுடன் (பிப்ரவரி 26) 12 வருடங்களாகிறது. சமந்தா நடிகையாக திரையுலகில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனயைடுத்து ஏ மாயா சேசாவே படத்தில் குறித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று திரையுலகில் அடியெடுத்து 12 ஆண்டுகளாகிறது. லைட், கேமரா, ஆக்சன் ஆகியவை கொண்ட மறக்க முடியாத 12 ஆண்டு நினைவுகள். இந்த ஆசிர்வதிக்கப்பட்ட பயணம் மற்றும் உலகின் சிறந்த ரசிகர்களைக் கொண்டிருப்பதற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.