முகப்பு
செய்திகள்

இயக்குநர் ஹரி - அருண் விஜய்யின் 'யானை' : வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்யின் நாயகனாக நடித்துள்ள யானை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
பகிர்:

இயக்குநர் ஹரி நீண்ட இடைவேளைக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் யானை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை டிரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ் சார்பாக சக்திவேல் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் அருண் விஜய்யிற்கு ஜோடியாக பிரிய பவானி ஷங்கர் நடிக்க, சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு, சரத்குமார், ஆடுகளம் ஜெயபாலன், இமான் அண்ணாச்சி, ராஜேஷ், போஸ் வெங்கட், சஞ்சீவ், புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சினேகன், ஏகாதேசி, அறிவு ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர். 

அருண் விஜய்யும், இயக்குநர் ஹரியும் உறவினர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் முதன்முறையாக யானை படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் வருகிற மே 6 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.