செய்திகள்

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சஞ்சீவை ஜோடியாக சந்தித்த வருண் மற்றும் அக்சரா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சஞ்சீவை வருண் மற்றும் அக்சரா சமீபத்தில் சந்தித்துள்ளனர். 

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அமீர் டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றார். 

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஞ்சீவ் வெளியேறினார். இவர் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நுழைந்து சில வாரங்களே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராதது எல்லாம் நடைபெற்று வருவதால் இந்த முறை யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறுவார் என்பது கணிப்பதற்கு சற்று சிரமமாகவே இருக்கிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சஞ்சீவை வருண் மற்றும் அக்சரா சந்தித்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்திருந்த ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT