செய்திகள்

திரைப்படமாகிறது வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு: பிரபல இயக்குநர் அறிவிப்பு

DIN

வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரது பெருமைகள் குறித்து தமிழில் பதிவிட்டிருந்தார். 

அவரது பதிவில், வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரது பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் சுசி கணேசன், தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகா ராணி வேலு நாச்சியரின் வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டு வரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன். 

தள்ளிப்போன 'ஆர்ஆர்ஆர்': விளம்பரங்களுக்காக செலவு செய்த ரூ.20 கோடி வீண் எனத் தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இணை அமைச்சர் எல்.முருகனும் வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியதில் படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் அளித்துள்ளது. 

இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடு போரிட்டு வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றை தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு, உலகமே கொண்டாட வைத்து விடாலம் என்ற நம்பிக்கை பிறக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT