செய்திகள்

அஜித் பட நடிகருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

அஜித்தின் வீரம் படத்தில் அவரது தம்பியாக நடித்திருந்த சுஹைல் சந்தோக்கிற்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

DIN

கரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 

சமீபத்தில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமானதாக அறிவித்தார். 

இந்த நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை தொகுத்து வழங்கும் சுஹைல் சந்தோக் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

''என்ன வேண்டுகிறீர்களோ அதில் கவனமாக இருங்கல். நான் புத்தாண்டின்போது பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்று வேண்டினேன். ஆனால் ஒமைக்ரான் பாசிட்டிவுடன் இந்த 2022 ஆம் ஆண்டு துவங்கியிருக்கிறது. விரைவில் குணமாகி என் அன்றாட பணிகளை தொடருவேன் என நம்பிக்கை இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

சுஹைல் சந்தோக் நடிகர் அஜித்தின் 'வீரம்' படத்தில் அவரது தம்பியாக நடித்திருந்தார். அவர் நடித்த ஒரே படம் 'வீரம்' மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT