செய்திகள்

'83' படத்தில் தன்னை நினைவுபடுத்தும் சிறுவன் குறித்து சச்சின் கருத்து - ''அந்த சிறுவன்...''

DIN

கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்ற தருணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான 83 திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

வரலாற்றுத் தருணத்தை மிக தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருப்பதாக இந்தப் படத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறுவனாக கிரிக்கெட் போட்டிகளை பார்த்து மகிழ்வதாக காட்டப்பட்டிருக்கும்.  

இதனை 83 படம் குறித்த டிவிட்டர் பதிவில் சச்சின் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, '' ரன்வீர் சிங்கின் 83 படத்தில் வரலாற்று தருணத்தை எல்லா கோணங்களிலும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதன்முறையாக உலக கோப்பை வென்ற தருணத்தை கபில் தேவ் மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்.

அந்த சிறுவனுக்கு இந்த வெற்றி மிகப்பெரிய தூண்டுகோலாக அமைந்திருக்கும் என்பது எனக்கு தெரியும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT