லூசிஃபர் படத்துக்கு பிறகு பிருத்விராஜ் இயக்கியுள்ள படம் புரோ டேடி. இந்தப் படத்தில் மோகன்லாலும், பிருத்விராஜும் அப்பா - மகனாக நடித்துள்ளனர்.
மேலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவும், பிருத்விராஜுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷனும் நடித்துள்ளனர். மேலும் கனிகா, சார்லி, சௌபின், உன்னி முகந்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் படம் தொடர்பாக வெளியான தகவல்: புகைப்படம் மூலம் உறுதிபடுத்திய மாரி செல்வராஜ்
இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இ:ையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.