செய்திகள்

மகள் மற்றும் பேத்தியுடன் நடிகர் விஜயகுமார்: அச்சு அசல் அம்மாவைப் போல மகள்

பேத்தியுடன் நடிகர் விஜயகுமார் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினரின் மூன்றாவது மகள் ஸ்ரீதேவி சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த ரிக்சா மாமா, அம்மா வந்தாச்சு உள்ளிட்ட படங்கள் மிக பிரபலம். 

கதாநாயகியாக தமிழ், தெலுங்கில் நடித்துவந்த ஸ்ரீதேவி, திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களை நடிகை ஸ்ரீதேவி அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். 

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது அப்பா விஜயகுமார் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை ஸ்ரீ தேவி குழந்தையாக எப்படி இருந்தாரோ, அதே போன்று அவரது மகளும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

SCROLL FOR NEXT