செய்திகள்

'நடிகர் அஜித்துக்கு நன்றி': இயக்குநர் சிவாவின் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகர் அஜித்துக்கு இயக்குநர் சிவா தனது ட்விட்டர் பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வீரம், விஸ்வாசம் திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஸ்வாசம் திரைப்படம் பெரும் வெற்றிபடமாக அமைந்தது. 

இந்த நிலையில் வீரம் வெளியாகி 7 வருடங்களும், விஸ்வாசம் வெளியாகி 3 வருடங்களும் ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.  

இந்த நிலையில் இயக்குநர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜனவரி 10 ஆம் தேதி வெளியான வீரம், விஸ்வாசம் திரைப்படங்கள்  எனக்கும் என் குழுவினருக்கும் மகிழ்ச்சியையும், ஆசிர்வாதத்தையும் அளித்தது.   நடிகர் அஜித். அஜித் ரசிகர்கள், ஊடகத்தினர், திரைப்பட  ரசிகர்கள், விஜயா புரொடக்சன்ஸ், சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT