செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள 'நாய் சேகர்' பட பாடலை வெளியிடும் கார்த்தி

ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ள நாய் சேகர் பட பாடலை நடிகர் கார்த்தி வெளியிடுகிறார். 

DIN

நகைச்சுவை நடிகர் சதிஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'நாய் சேகர்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்தப் படத்தின் புதிய பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அஜீஸ் இசையில் நைன்டிஸ் கிட் எனத் துவங்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் பாடலை கிஷோர் ராஜ்குமார் எழுதியுள்ளார். இந்தப் பாடலை இன்று மாலை 5 மணிக்கு நடிகர் கார்த்தி வெளியிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT