செய்திகள்

'இனி டாக்டர் சிம்பு' : டாக்டர் பட்டம் பெற்ற சிம்புவின் புகைப்படங்கள் வைரல்

டாக்டர் பட்டம் பெற்ற சிம்புவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

DIN


திரைப்படத்துறையில் நடிகர் சிம்பு செய்த சாதனைக்காக அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் இன்று வழங்கப்பட்டது. டாக்டர் படத்தை தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கே.கணேஷ் சிம்புவுக்கு வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

டாக்டர் பெற்ற சிம்பு தனது அம்மா அப்பாவை சந்தித்து ஆசி பெற்றார். அவரது அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அமா உஷா ராஜேந்தர் இருவரும் சிம்புவை ஆரத்தழுவி முத்தமிட்டனர். இந்தக் காட்சிகள் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரவி, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சிம்பு தற்போது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கொரோனா குமார் படத்திலும் சிம்பு நடிக்கவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

SCROLL FOR NEXT