செய்திகள்

தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக்: தனியார் உணவகம் மீது சீரியல் நடிகை பகீர் குற்றச்சாட்டு

தனியார் உணவக வடையில் பிளாஸ்டிக் இருந்ததாக பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

DIN

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தவர் சாம்பவி. இந்த தொடரில் அவருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் இருந்தது. சில காரணங்களால் அந்த தொடர் பாதியில் நின்றது. 

தற்போது இவர் தெலுங்கு தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் ஆன்லைன் டெலிவரி மூலம் உணவு வாங்கி சாப்பிட்டதாகவும், வடையில் பிளாஸ்டிக் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதனை கவனிக்காமல் உண்டதால் பிளாஸ்டிக் அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டதாகவும் மிகவும் சிரமப்பட்டு அதனை வெளியில் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடும்போது கவனமாக இருங்கள் எனவும் எச்சரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

SCROLL FOR NEXT