செய்திகள்

விஷால் - எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆண்டனி - இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் கூட்டணியில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

DIN

மாநாடு படத்துக்கு பிறகு விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் சார்பாக எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ளார். 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகவுள்ளது. பாட்ஷா படத்தில் ரகுவரனின் பெயர் மார்க் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | புஷ்பாவாக மாறிய ஜடேஜா

இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ''கடவுளே எல்லா நல்ல கதைகளையும் என்கிட்டவே அனுப்புகிறாயே. ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தை மாநாடு 2 என சொல்லலாம்.  அப்படி ஒரு திரைக்கதை'' என்று குறிப்பிட்டிருந்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT