செய்திகள்

பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் குக் வித் கோமாளி பிரபலத்தின் படம்: சிவகார்த்திகேயன் வாழ்த்து

பொங்கலை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படத்தின் குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.  

DIN

நகைச்சுவை நடிகரான சதிஷ் முதல் முறையாக நாயகனாக நடித்திருந்த படம் நாய் சேகர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேற்று(வியாழக்கிழமை) வெளியானது. 

கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சதிஷிற்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா லக்ஷ்மி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு அஜீஸ் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் எழுதியுள்ள ஒரு பாடலுக்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். 

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் வாழ்த்துகள் ஹீரோ சதிஷ் சகோ. இந்தப் படம் வெற்றிப் பெற படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT