செய்திகள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தியின் 'விருமன்' முதல் பார்வை போஸ்டர் வெளியானது

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

DIN

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பருத்தி வீரன் படத்துக்கு பிறகு மதுரை மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என கார்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்திருந்தார். 

இந்தப் படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 'செக்' வைத்த பட்ஜெட்! எஸ்டிடி என்பது என்ன?

ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் தகவல்!

SCROLL FOR NEXT