கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி முன்னதாக கௌதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி நீண்ட இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிவகார்த்திகேயன் தெலுங்கு பட இயக்குநர் அனு தீப் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.