செய்திகள்

’கேஜிஎஃப் 2’ உடன் மோதும் அமிர்கானின் ’லால் சிங் சத்தா’

பாலிவுட் நடிகர் அமிர்கான் நடிப்பில் உருவான ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் கேஜிஎஃப் 2 வெளியாகும் ஏப்ரல் -14 ஆம் தேதி வெளியாகிறது.

DIN

பாலிவுட் நடிகர் அமிர்கான் நடிப்பில் உருவான ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் கேஜிஎஃப் 2 வெளியாகும் ஏப்ரல் -14 ஆம் தேதி வெளியாகிறது.

இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தத் திரைப்படமான ‘கேஜிஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல்-14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அதனுடன் போட்டியிடும் விதமாக பிரபல பாலிவுட் நடிகர் அமிர்கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படமும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்கான் புரடக்‌ஷன் மற்றும் கிரன் ராவ் தயாரிப்பில் அத்வைத் சந்திரன் இயக்கிய ‘லால் சிங் சத்தா’-வில் அமிர்கானுடன் கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நகைச்சுவை பாணியில் உருவாகும் இப்படம் ஹாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது உறுதி!

ஸ்ட்ராபெர்ரி சிவப்பு... ரகுல்!

தனது முதல் சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்த துருவ் ஜுரெல்!

கைதாகிறாரா ஆனந்த்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

SCROLL FOR NEXT