பிக் பாஸ் அல்டிமேட் போட்டியின் முதல் போட்டியாளர் 
செய்திகள்

பிக் பாஸ் அல்டிமேட்: முதல் போட்டியாளர் இவர்தான்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5  ஜனவரி 16-ஆம் தேதியுடன் முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த இறுதி நிகழ்ச்சியின் போதே பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் காணலாம். இதன் மூலம் நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்ளலாம். வரும் 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கவிஞரும் பாடலாசிரியருமான சிநேகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புரோமோவையும் டிஸ்ட்னி ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.

''தோத்துப்போன வெறுப்போட, திரும்ப வரான் நெருப்போட. ஆட்டம் அனலா இருக்கும். இந்த கூட்டத்துக்கே சவாலா இருக்கும்'' என்று சிநேகன் கவிதை வாசிக்கும் வகையில் சுவாரசியமான முறையில் புரோமோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT