விக்ரம் - துருவ் விக்ரமின் மகான் : வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் மகான். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பீஸ்ட் இயக்குநர் நெல்சனுடன் பிக்பாஸ் ராஜு: பின்னணி என்ன?
இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. கன்னட பதிப்புக்கு மகா புருஷா எனப் பெயரிடப் பட்டுள்ளது. முதன்முறையாக அப்பாவும் மகனும் இணைந்து நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
His Time Begins