செய்திகள்

‘இனி எல்லாரையும் ஓட வைப்பேன்’: பிக் பாஸ் அல்டிமேட்டின் 2-வது போட்டியாளர்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளர் அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. 

DIN

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளர் அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5  ஜனவரி 16-ஆம் தேதியுடன் முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த இறுதி நிகழ்ச்சியின் போதே பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் காணலாம். இதன் மூலம் நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்ளலாம். வரும் 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 

இந்நிலையில், நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக சிநேகன் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது போட்டியாளராக ஜூலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான புரோமோவையும் டிஸ்ட்னி ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT