செய்திகள்

பொதுவெளியில் முத்தம்: பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராகவே வழக்கா? நீதிபதி அதிரடி

பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராகவே வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதி அதிரடியாக தெரிவித்துள்ளனர். 

DIN

நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2007 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெர்ரி என்பவரும் கலந்துகொண்டிருந்தார். 

நிகழ்ச்சியின் நடுவே ரிச்சர்டு கெர்ரி, நடிகை ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுவெளியில் ஷில்பா ஷெட்டி ஆபாசமாக நடந்துகொண்டதாக பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 

இதுகுறித்து வருத்தம் தெரிவித்த ரிச்சர்டு கெர்ரி, முத்தம் கொடுத்தால் எயிட்ஸ் பரவாது என்பதை விளக்கவே அவ்வாறு நடந்துகொண்டதாக தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 15 வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கு மும்பையில் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டவர். ஆனால் அவர் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 13 - சேலத்தில் விஜய் பிரசாரம்!

நீ சிரித்து நான் பார்த்ததில்லை! எப்ஸ்டீன் பற்றி கேட்ட பெண் செய்தியாளருக்கு டிரம்ப் பதில்!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: 35 ஆக உயர்ந்த பலி: 393 பேர் காயம்!

விஜய்யை புகழ்ந்து முருகன் பாடல்! மன்னிப்பு கோரினார் பாடகர் வேல்முருகன்!

தனுஷுக்கு வில்லனாக மம்மூட்டி?

SCROLL FOR NEXT