செய்திகள்

தம்பி அருள்நிதி பட டீசரை வெளியிடும் அண்ணன் உதயநிதி

அருள்நிதியின் தேஜாவு பட டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிடவிருக்கிறார்.  

DIN

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தேஜாவு. அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மதுபாலா, அச்சுயுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படம் தெலுங்கிலும் உருவாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த், சண்டைப்பயிற்சி இயக்குநராக பிரதீப் தினேஷ், கலை இயக்குநராக வினோத் ரவீந்திரும் பணிபுரிந்துள்ளனர். 

இந்தப் படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடுகிறார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT