செய்திகள்

''சமந்தாதான் முதலில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தது'': நாகர்ஜுனா அதிர்ச்சி தகவல்

சமந்தாதான் முதலில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தது என நாக சைதன்யாவின் அப்பாவும் பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். 

DIN

கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் சில மாதங்களுக்கு முன் பிரிவதாக அறிவித்தனர். இருவரது பிரிவுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் இருவரும் இதுபற்றி பதிலளிக்கவில்லை. 

சில நாட்களுக்கு முன் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்த பதிவை நீக்கினார். இதனையடுத்து இருவரும் மீண்டும் இணையவிருக்கிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

இந்த நிலையில் நாக சைதன்யாவின் அப்பாவும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகர்ஜுனா சமீபத்தில் ஒரு பேட்டியில், ''சமந்தாதான் முதலில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தது'' என்று தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் நாகர்ஜுனா தெரிவித்ததாவது, ''நாக சைதன்யா சமந்தாவின் முடிவை ஏற்றார். ஆனால் நாக சைதன்யாவுக்கு நான் வருத்தப்படுவேன் என்று முதலில் தயங்கினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு புத்தாண்டை நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். அவர்களுக்கு பிரச்னை எப்படி உருவானது என்பது எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT