செய்திகள்

'டான்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டான்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

DIN

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டான்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டான்'. சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், ஆர்ஜே விஜய், சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கல்லூரி பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சில காட்சிகளில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் பள்ளி மாணவர்களாகவும் நடித்துள்ளனராம்.

இந்தப் படத்திலிருந்து ஜலபுலஜங்கு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாக கேட்கப்பட்டு வரும் நிலையில் ‘டான்’ திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT