செய்திகள்

இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து சிவகார்த்திகேயன் கருத்து: விடியோ பகிர்ந்த பிரேம்ஜி

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு இணைந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆவலை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து நடிகர சிவகார்த்திகேயன் பேசும் விடியோ இணையதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஒரு விடியோவில் பேசும் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவிடம் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

கனா பட இசை வெளியீட்டு விழாவில் பேசும் சிவகார்த்திகேயன், அற்புதமான நட்புகள் சேர்ந்தா வெற்றிகள் குமியுமடா என்ற இயக்குநர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 பட பாடலை குறிப்பிட்டு பேசுகிறார்.

இதனை முழுமையான விடியோவாக இணைத்து இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆவலை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

இதனை வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜியும் பகிர்ந்துள்ளார். அவரது பதிவிலும் ரசிகர்கள் தங்களின் ஆசையைப் பகிர்ந்து வருகின்றனர். வெங்கட் பிரபுவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்கள் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரிசி தவிட்டில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலை அமைப்பவா்களுக்கு மானியம்: ஆட்சியா்

பொருள்களின் தரத்தை உறுதி செய்வதில் முதன்மை மாநிலம் தமிழகம்: வேலூா் ஆட்சியா்

பாகிஸ்தான்: மோதலில் 11 வீரா்கள் உயிரிழப்பு

அயோத்தியில் தியாகராஜ சுவாமிகள், அருணாசல கவிராயா் சிலைகள் திறப்பு

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT