செய்திகள்

விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் டீசர் வெளியானது

விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் டீசர் வெளியானது. 

DIN

விக்ரம் - துருவ் முதன்முறையாக இணைந்து நடித்த மகான் திரைப்படம் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படத்திலிருந்து சூரையாட்டம், எவன்டா எனக்கு கஷ்டடி போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மதுவினால் ஏற்படும் தீங்குகளை சொல்லி, மகாத்மா காந்தியின் நினைவாக காந்தி மகான் எனப் பெயரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒருவன், மதுக்கடைகளை நடத்தும் அளவுக்கு தள்ளப்படுவதுதான் இந்தப் படத்தின் கதையாக இருக்கும் என்று டீசரின் வாயிலாக புரிந்துகொள்ள முடிகிறது.

இருப்பினும் படம் வெளியானால் தான் படத்தின் முழுமையான கதை என்னவென்பது தெரியவரும். டீசரின் கடையில் தான் துருவ் காட்டப்படுகிறார். அவரது வேடம்  என்னவென்பது ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT