செய்திகள்

யூடியூபில் வெளியான விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படக் காட்சி

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் காட்சி ஒன்று யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

DIN

விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்து நடித்துள்ள வீரமே வாகை சூடும் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை து.பா.சரவணன் இயக்கியுள்ளார். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்க, யோகி பாபு, பாபு ராஜ், குமாரவேல், ரவீனா ரவி, மாரிமுத்து, ஆர்என்ஆர் மனோகர், கவிதா பாரதி, துளசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சில நிமிட காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT