செய்திகள்

அடுத்தடுத்து இளையராஜா பாடல்களை பயன்படுத்தும் யுவன் ! வெளியானது காபி வித் காதல் பட ரம் பம் பம் பாடல் ப்ரமோ

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ள காபி வித் காதல் படத்தின் ரம் பம் பம் பாடல் வெளியானது

DIN

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ள காபி வித் காதல் படத்தின் ரம் பம் பம் பாடல் வெளியானது

சுந்தர்.சி தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் காபி வித் காதல் என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

மேலும் அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் திவ்யதர்ஷினி, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லே, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்திலிருந்து ரம் பம் பம் பாடல் இன்று(ஜூலை 1) மாலை வெளியாகவுள்ளது. முன்னதாக இந்தப் பாடலின் ப்ரமோ விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக அதே படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் பாடலை டிக்கிலோனா படத்துக்காக யுவன் பயன்படுத்தியிருந்தார். அந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT