செய்திகள்

வெளியானது யோகி பாபுவின் பன்னி குட்டி டிரெய்லர்

யோகி பாபு மற்றும் கருணாகரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள பன்னி குட்டி படத்தின் டிரெய்லர் வெளியானது. 

DIN

யோகி பாபு மற்றும் கருணாகரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள பன்னி குட்டி படத்தின் டிரெய்லர் வெளியானது. 

கிருமி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அனுசரண் அடுத்ததாக இயக்கியுள்ள படம் பன்னி குட்டி. இந்தப் படத்தில் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். 

சூப்பர் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி, யுத்தம் செய், கிருமி, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களுக்கு இசையமைத்த கே இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவான இந்தப் படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்! 10 கோடி பேர் அவதி! அடுத்து என்ன?

நேபாளத்துக்கு எதிராக இத்தாலி பந்துவீச்சு..! முதல் வெற்றியைப் பெறப்போவது யார்?

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

டி20 உலகக் கோப்பை 2026-ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இலங்கை!

ஜெமினி, சாட்ஜிபிடியை முந்தும் இந்தியாவுக்கான பிரத்யேக செய்யறிவு தளம் சர்வம் AI

SCROLL FOR NEXT